Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

மகாஜன பெண்கள் உதைபந்தாட்ட அணிகள் மாகாணமட்டத்தில் சாம்பியன்கள்

18th June, 2026

20 வயது அணி தொடர்ச்சியாக 11 ஆவது தடவைகள் சாம்பியன்.
 
17 வயது அணி தொடர்ச்சியாக 5 ஆவது தடவைகள் சாம்பியன்.
 
வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான பெண்கள் உதைபந்தாட்டப் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் இரு அணிகளும் மாகாணமட்டத்தில் சாம்பியன்களாகின. இறுதிப்போட்டிகள் இன்று (18.06.2026) யா/வயாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தி்ல் நடைபெற்றன.
 
20 வயது அணி இறுதிப்போட்டியில் மனிப்பாய் மகளிர் கல்லூரி அணியை எதிர்கொண்டு 4:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.
 
 17 வயது அணி இறுதிப்போட்டியில் யூனியன் கல்லூரி அணியை எதிர்கொண்டு 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியனாகியது.
 
 வடமாகாண பெண்கள் உதைபந்தாட்டப்போட்டியில் சிறந்த வீராங்கனையாக மகாஜனக் கல்லூரியின் 20 வயது அணி வீராங்கனை யசோதரன் லயன்சிகா தெரிவுசெய்யப்பட்டார்.
 
20 வயது அணி 2014 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக (2020,2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது) 11 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியன்களாக வலம்வருகின்றன.
 
17 வயது அணியும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 5 ஆவது தடவைகளாக மாகாணமட்டத்தில் சாம்பியன்களாக வலம்வருகின்றது. மேலும் 17 வயது அணி தேசியமட்டத்தில் போட்டி ஆரம்பிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2025 வரை தொடர்ச்சியாக 4 தடவைகள் சாம்பியன்களாக வலம்வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வருடமும் தேசியமட்டத்தில் பங்குபற்றவுள்ளது.