Loading...
மகாஜனக் கல்லூரி செய்திகள்

Mahajana College News

16 வயதுப்பெண்கள் அணிகளுக்கிடையே நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி அணி சாம்பியன்.

17th April, 2026

ஐக்கிய இராச்சிய தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணம் பாடசாலைகள் விளையாட்டுச்சங்கம் 16 வயதுப்பெண்கள் அணிகளுக்க இடையே நடாத்திய உதைபந்தாட்டப்போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி அணி சாம்பியனாகியுள்ளது.
 
இறுதிப்போட்டியில் யா/யூனியன் கல்லூரியை எதிர்கொண்ட மகாஜனக் கல்லூரி 1:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
 
இப்போட்டி நேற்று 17.04.2026 வெள்ளிக்கிழமை யா/நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.