பளுதூக்குதல் போட்டியில் மகாஜனாவின் 20 வயது ஆண்கள், 17 வயது பெண்கள் சாம்பியன்
22nd June, 2026
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்குதல் போட்டியில் மகாஜனக் கல்லூரியின் 20 வயது ஆண்கள் அணியும் 17 வயது பெண்கள் அணியும் சாம்பியனாகியுள்ளன.
20 வயது ஆண்கள் அணி 03 தங்கம், 01 வெள்ளி என நான்கு பதக்கங்களை சுலீகரித்து 11 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தை பெற்றுள்ளது.
17 வயது பெண்கள் அணி 02 தங்கம், 01 வெள்ளி என மூன்று பதக்கங்களை சுவீகரித்து 08 புள்ளிகளை பெற்று முதலாமிடம் பெற்றுள்ளது.
07 தங்கம், 03 வெள்ளி, 01 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை எமது கல்லூரி பெற்றுள்ளது.
இப்போட்டி கடந்த யூன் 19, 20 ஆகிய தினங்களில் யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
20 வயது ஆண்கள் பிரிவில் v . சாதுரியன் 61kg எடை பிரிவில் 137kg தூக்கி 1ம் இடம்
20 வயது ஆண்கள் பிரிவில் J. கோமகன் 67kg எடைபிரிவில் 140kg தூக்கி 1ம் இடம்
20 வயது ஆண்கள் பிரிவில் J.ஜெனுசின் 109kg எடைபிரிவில் 195kg தூக்கி 1ம் இடம்
20 வயது ஆண்கள் பிரிவில் T. கவியழகன் 81kg எடைபிரிவில் 170kg தூக்கி 2ம் இடம்
20 வயது பெண்கள் பிரிவில் R. ஸ்ரீவித்தகி 76kg எடைபிரிவில் 110kg தூக்கி 1ம் இடம்
17 வயது ஆண்கள் பிரிவில் S. டிஷான் 102kg எடைபிரிவில் 120kg தூக்கி 1ம் இடம்
17 வயது ஆண்கள் பிரிவில் T. லபிஷாந்த் 102kg எடைபிரிவில் 98kg தூக்கி 2ம் இடம்
17 வயது ஆண்கள் பிரிவில் S. குகதர்ஷன் 102+kg எடைபிரிவில் 94kg தூக்கி 3ம் இடம்
17 வயது பெண்கள் பிரிவில் T. சர்மியா 45kg எடைபிரிவில் 53kg தூக்கி 1ம் இடம்
17 வயது பெண்கள் பிரிவில் S.ஷானுஜா 81kg எடைபிரிவில் 72kg தூக்கி 1ம் இடம்
17 வயது பெண்கள் பிரிவில் T. ஆரதி 49kg எடைபிரிவில் 55kg தூக்கி 2ம் இடம்










