7th June, 2026
இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனம் 18 வயது பெண்கள் அணிகளுக்கிடையில் நடாத்திய உதைபந்தாட்டாச் சுற்றுப்போட்டியில் மகாஜனக் கல்லூரி தேசிய மட்டத்தில் சாம்பியனாகியுள்ளது.
குருணாகல் மலியதேவ பெண்கள் மகளிர் கல்லூரியை இறுதிப்போட்டியில் எதிர்கொண்ட மகாஜனா 2;0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்று தேசியமட்ட சாம்பியனாகியுள்ளது.
இப்போட்டி இன்று கொழும்பு குதிரைத்திடல் மைதானத்தில் நடைபெற்றது.

