Loading...
OSA நிகழ்வுகள்

OSA Events

மகாஜன இரவு - Mahajana Night
Event Date: 14/03/2026 at 18:30
Location:
Crystal Banqueting Hall
466-468, Uxbridge Road, Hayes UB4 OSD

அனைத்து மகாஜனன்களுக்கும் வணக்கம்!
 
1970 களிலிருந்து 2000+ வரையான ஒவ்வொரு வகுப்பு ஐக்கிய இராட்சிய நண்பர்களையும் ஒரே இடத்தில் சந்தித்து மகிழும் நாள் ஒன்றை வருகின்ற வருடம்  மார்ச் மாதம் Crystal hall இல் நடைபெறவுள்ள Mahajana Night - Dinner & Dance நிகழ்வினூடாக ஒழுங்குபடுத்தி வருகின்றோம் இதற்கு எமது மகாஜனன்கள் அனைவரது ஆதரவையும் வேண்டி நிற்கிறோம்.
 
இந்த நிகழ்வு ஒரு முன்மாதிரியானதாக மட்டுமில்லாமல் ஒரு மறக்க முடியாத சிறந்த நாளாகவும் அமைய வேண்டும்.
 
அந்த வகையில் மகாஐனன்களும் அவர்கள் பிள்ளைகளும் கலந்து கொண்டு சிறந்த நிகழ்வுகளையும் வழங்கி அந்த நாளை சிறப்பாக்குவது மட்டுமல்ல ஒவ்வொரு வகுப்பு நண்பர்களையும் மேடை ஏற்றி அறிமுக நிகழ்வையும் வழங்குவதாகவும்  திட்டமிட்டுள்ளோம்.
 
நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக திட்டமிட வசதியாக உங்கள் வருகையை உங்கள் வகுப்பு பிரதிநிதிகள் ஊடக உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் பின்னர் குறிப்பிடும் காலத்திற்குள் நுழைவுச்சீட்டினைப் பெற்று உங்கள் வரவினை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
உங்கள் வகுப்பில் உங்களுடன் கற்ற அயல் பாடசாலை நண்பர்களையும் இணைக்கலாம்.
 
வெல்லுக மகாஐன மாதா!
 
நன்றி!

மகாஜன இரவு - Mahajana Night